வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் பேட்மிட்டன் வீராங்கனையான பி வி சிந்து விற்கும் தொழிலதிபர் வெங்கட் சாய் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக ரசிகர்களின் கனவு பொய்யாக போனதாக இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்றவர் பிவி சிந்து. இவர் தற்பொழுது தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தான் பிவி சிந்து அவர்களுக்கும் விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள உறவானது ரசிகர்களிடையே பெரிதளவும் பேசப்பட்டு வருகிறது.
அதாவது, பிவி சிந்து ரியோ ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு முன்பே அவருக்கும் சென்னைக்கும் ஒரு உறவு இருந்தது.ஐபிஎல் பாணியில் பேட்மிண்டனை மையமாக வைத்து இந்திய பேட்மிண்டன் என்ற தொடர் நடைபெற்றது.இதில் சென்னை ஸ்மாசஸர் அணியின் உரிமையாளரான விஜய பிரபாகர் ஏலத்தில் பிவி சிந்துவை ரூபாய் 39 லட்சத்திற்கு வாங்கினார்.
அதற்கு முன்பே பிவி சிந்துவின் ஒரு ஸ்பான்சர் ஆக விஜய பிரபாகர் இருந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு பிவி சிந்துவுக்கும் விஜயகாந்த் குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு உறவு இருந்து வந்துள்ளது.சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பிவி சிந்துவும் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இவர்கள் ஒற்றுமையுடன் இருந்ததை கண்ட பலர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்று பேச தொடங்கினர். விஜய பிரபாகரன் அவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று தெளிவுபடுத்தினார்.இந்த சூழலில் பிவி சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில், பி வி சிந்து தமிழ்நாட்டுக்கு மருமகளாக வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.