உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா என்ற போலி சாமியார் கைதாகியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் இப்பொழுது முதல்வர் யோகி ஆதித்யாநாத் என்ற தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் என்ற நகரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு போலி சாமியார் 2005ஆம் ஆண்டு மெயின் புரி என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் . இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் வந்தபொழுது 2010இல் பரெலி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணையும் சாமியார் திருமணம் செய்துள்ளார்.அவர்களுக்கும் இடையே வேறு எதுவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
அது எடுத்து 2014இல் அந்த சாமியார் 3வது திருமணம் செய்தார். மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்தார். அந்தப் பெண் முந்திய திருமணங்கள் குறித்த விஷயம் தெரியவரவே மனம் உடைந்து தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.
மேலும் 2019 – இல் என ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த சாமியார் ஐந்தாவது மனைவியை துன்புறுத்தியதாக தெரிகிறது.இதன் காரணமாகவே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் சாமியாரின் ஐந்தாவது மனைவி. இந்த புகார் அளித்த விவரம் மற்ற மனைவிகள் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. யாருக்கும் விவாகரத்து முறையாக கொடுக்காமல் 5 திருமணம் செய்து கொண்டுள்ள தன் கணவரை பற்றி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.