பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

0
275

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்..

இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.

உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதேபோல பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என டாக்டர் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று டில்லியில் உள்ள மருத்துவர்கள் கருப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

டாக்டர்கள் குறித்தும் அலோபதி மருத்துவம் பற்றியும் தவறான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவை கண்டித்த ஜூன் ஒன்றாம் தேதி கருப்பு தினத்தை முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு அனைத்தும் நடைபெறும். எந்தப் பிரச்சினையும் இல்லாமல், எந்த தடையும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

மேலும் ராம்தேவ் அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!
Next articleஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here