உலகிலேயே முதல்முறையாக மனிதர்களின் பார்வைப்படாமல் முடிக்கப்பட்டு IVF முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
பொதுவாக மனிதர்களின் கைகளால் மேற்கொள்ளப்படக்கூடிய ICSI செயல்முறை 23 படிநிலைகளை கொண்டிருக்கும். ஆனால் தானியங்கி முறையில் இவை அனைத்தும் AI உதவியுடன் முடிக்கப்பட்ட வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சாதனையானது அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Conceivable life sciences என்ற நிறுவனத்தில் இருக்கக்கூடிய டாக்டர் ஜாப்ஸ் என்பவரது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செயல்முறைக்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்ணினுடைய டோனர் முட்டைகளின் உதவியைக் கொண்டு கருத்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக 5 கருமுட்டைகளில் கருக்கூட்டப்பட்டதில் 4 முட்டைகள் வெற்றிகரமாக கரு கூட்டத்தில் இணைக்கப்பட்டது. அதிலிருந்து தற்பொழுது 1 கருமுட்டை மட்டும் நன்றாக வளர்ந்து நல்லபடியாக உலகின் முதல் AI குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறது.
இந்த முறை முழுவதும் AI மூலமாக தானாகவே விந்தணுவை தேர்ந்தெடுப்பது முதல் கரு வளர்ந்து பிறப்பது வரை அனைத்தும் தானியங்கி முறையில் நடைபெற்றது என்றும் இது உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய IVF சிகிச்சை முறையின் புரட்சியாகவும் பார்க்கப்படுகிறது. எதிர்காலங்களில் IVF சிகிச்சையானது தானியங்கி முறையிலும் துல்லியமாகவும் நடைபெற இந்த AI முறையானது பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.