சூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!

Photo of author

By Parthipan K

அரக்கோணம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்றை சூட்கேசில் வைத்து வீசி உள்ளனர்.

அரக்கோணம் ராணிப்பேட்டையில் பாணாவரம் கிராமத்தை அடுத்து தப்பூர் உள்ளது.

அங்கே நேற்று மாலை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்துள்ளது,

அங்கு வந்த கிராம அதிகாரி சுமன் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். சூட்கேஸ் உள்ளே ஆண்குழந்தை ஒன்றும், நைட்டி மற்றும் டவல் இருந்து உள்ளது..

குழந்தை உள்ளே உயிருடன் மூச்சி திணறிக்கொண்டு இருந்து உள்ளது.

குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்கு பிறகு குழந்தை நல மையம் ஒன்றில் குழந்தை சேர்க்கப்பட்டது.

போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.