தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

Photo of author

By Parthipan K

பிறந்த குழந்தையை தொப்புள் கொடியோடு சேர்த்து மூட்டையாகக் கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்படிருப்பதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அவற்றை பரித்து பார்த்தனர்.அதில் தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை ஒன்று இருந்தது.

மேலும் குழந்தையை மீட்டு எடுத்த சம்பவத்தை வீடியோவாக  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும்,அவர்கள்  அந்த குழந்தையை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்த்தனர்.இது குறித்த தகவலறிந்து வந்த திருச்சி காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குழந்தையின் உண்மையான தாய் தந்தையர் பற்றி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.facebook.com/Trichy.Sheikabdulla/videos/2780086855604825/?extid=TNy2fvxe9hiWBgp8
தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை , முட்புதர்களில் வீசப்பட்ட சென்ற சம்பவம் மனிதநேயத்திற்கு எதிராக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இதனால் அப்பகுதில் பரபரப்பு நிலவியது.