பசியின் காரணமாக துடித்த பச்சிளம் குழந்தை! தாய் செய்த கொடூரம்!
பெண்கள் இப்படி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம். குழந்தைகளை விட பார்ட்டி முக்கியமா என்ன? முடியாத பட்சத்தில் வேறு யாரிடமாவது விட்டு விட்டாவது சென்று இருக்கலாம். இதே இந்த சம்பவம் நம் ஊரில் நடந்திருந்தால் நாமெல்லாம் பேசியே அவளை கொன்றிருப்போம்.
25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கணவனை பிரிந்து தனியாக தனது 3 வயது மகள் மட்டும் 11 மாத மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான விருந்தை கொண்டாட தனது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், 4 நாட்களாக வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
நான்கு நாட்களுக்கு பின் அவர் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது, பசி\\யால் 11 மாத குழந்தை இறந்ததுடன், 3 வயது மகளும் பட்டினியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய், குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர், இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த குழந்தையின் பாட்டி, தனது மகளை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, தனது குழந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த தாயை போலீசார் கைது செய்த நிலையில், தாயின் கடமையை செய்ய தவறியதற்காக அந்த பெண்ணுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இதை போல் சட்டங்கள் நம் நாட்டிலும் வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.