Back Pain: இந்த பொடியை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் முதுகு வலி சிட்டாக பறந்துவிடும்!!

Photo of author

By Divya

Back Pain: இந்த பொடியை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் முதுகு வலி சிட்டாக பறந்துவிடும்!!

நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்த்திருப்பது,முதுகு பகுதியில் காயம்,முதுகு தண்டு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது.முதுகு வலி இளம் வயதினர்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

முதுகு வலி வந்து விட்டால் அதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் கடும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

தீர்வு 01:

1)பூண்டு
2)பால்

50 கிராம் பூண்டை நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் பூண்டு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் முதுகு வலி பறந்து போய்விடும்.

தீர்வு 02:

1)மிளகு
2)கிராம்பு
3)சுக்கு
4)தண்ணீர்

ஒரு மிக்ஸி ஜாரில் 4 மிளகு,2 கிராம்பு மற்றும் 1 துண்டு சுக்கு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் முதுகு வலி முழுமையாக குணமாகும்.

தீர்வு 03:

1)மஞ்சள் தூள்
2)நாட்டு சர்க்கரை
3)பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.இவ்வாறு ஒரு மாதம் குடித்தால் முதுகு வலி சிட்டாக பறந்து விடும்.