BAD BREATH: வாயை திறந்தால் கமகமவென்று வாசனை வர.. வெற்றிலையுடன் இதை சேர்த்து மெல்லுங்கள்!!
இன்று ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல நோய்களை சந்தித்து வருகிறோம்.இதில் வாய் துர்நாற்ற பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.ஒருவரிடம் பேசும் பொழுது நம் வாயில் துர்நாற்றம் வீசினால் அவை நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் அசௌகரிய சூழலை ஏற்படுத்தி விடும்.ஒரு சிலருக்கு அவர்களது வாயில் இருந்து வரும் வாடையை அவர்களாலே தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும்.
இவ்வாறு வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் அவை நம் தன்னம்பிகையை குறைத்து விடும்.எனவே வாய் துர்நாற்றம்,பல் ஈறு தொடர்பான பாதிப்பு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை
2)ரோஜா இதழ்
3)வேப்பங்கொழுந்து
4)இந்துப்பு
4)கிராம்பு
6)பட்டை
7)ஏலக்காய்
செய்முறை:-
ஒரு ஏலக்காயில் உள்ள விதைகளை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை மற்றும் 2 கிராம்பை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் 5 வேப்பிலை மற்றும் ஐந்து ரோஜா இதழை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வெற்றிலையை எடுத்து அதனுள் கிராம்பு,பட்டை தூள்,ரோஜா இதழ் மற்றும் வேப்பங்கொழுந்து பேஸ்ட் சேர்க்கவும்.
பிறகு ஏலக்காய் விதை,இந்துப்பு சேர்த்து மடக்கி சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம்,பல் கறை,பல் மற்றும் ஈறு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை
2)மஞ்சள் தூள்
3)பெருஞ்சீரகம்
4)இந்துப்பு
செய்முறை:-
ஒரு வெற்றிலை எடுத்து அதனுள் சிட்டிகை அளவு மஞ்சள் தூள்,1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு சேர்த்து மடக்கி சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம்,பல் ஈறு தொடர்பான பாதிப்பு குணமாகும்