இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியானது நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கான விளம்பர வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் யாரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பேட் கம்மின்ஸ் சர்ச்சை பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டி குறித்து இந்திய அணி வீரர்கள் குறித்து பல ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணி ரசிகர்களை சீண்டும் வகையில் பதிலளித்துள்ளார் ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்மின்ஸ்.
விளம்பர வேலையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் பேட் கம்மின்ஸ், நேதன் லயன், டிராவிஸ் ஹெட், போலண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரிடம் இந்திய அணி வீரர் ஒருவரை உங்கள் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மற்ற வீரர்கள் ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் என வீரர்களை குறிப்பிட்டு பதிலளித்தனர். இவர்களை தொடர்ந்து பதிலளித்த பேட் கம்மின்ஸ் நான் யாரையும் இந்திய அணியில் இருந்து தேர்வு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த பதில் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் உள்ளது என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.