விடாமல் துரத்தும் வாயுத் தொல்லை பாதிப்பை பப்பாளி இலையை கொண்டு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பப்பாளி இலை – ஒரு
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு பப்பாளி இலையை பறித்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
**பிறகு பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நறுக்கிய பப்பாளி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகினால் குடலில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறிவிடும்.
**மேலும் பப்பாளி இலை சாறு பருகுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வரலாம்.
**செரிமான பாதிப்பால் சிரமமடைந்து வருபவர்கள் பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வரலாம்.
**வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் பப்பாளி இலை ஜூஸ் பருகி வந்தால் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம்.
**சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் பப்பாளி இலைக்கு உண்டு.எனவே தினமும் 10 மில்லி பப்பாளி இலை சாறு பருகுவதை நீங்கள் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
**கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.உடல் வீக்கத்தை குறைக்கும் மாமருந்தாக பப்பாளி இலை சாறு திகழ்கிறது.
**உடல் தசைகள் வலிமை அதிகரிக்க பப்பாளி இலையை அரைத்து ஜூஸாக பருகி வரலாம்.முடியின் வேர்கள் வலிமையடைய பப்பாளி இலை சாறு பருகுங்கள்.
**பப்பாளி இலை சாறு பருகி வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.பப்பாளி இலையில் வைட்டமின் ஏ,பி,ஈ மற்றும் கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தொடர்ந்து பப்பாளி இலை ஜூஸ் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.