எல்லோருக்கும் வாயு பிரச்சனை என்பது இயல்பான ஒன்று.ஆனால் அதிகப்படியான வாயுப் பிரச்சனை இருந்தால் அது கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.வாயு அதிகமானால் வயிறு வீக்கம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அது மட்டுமின்றி உடலில் இருந்து கெட்ட வாயுக்கள் வெளியேறுவதால் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும்.
உண்ணும் உணவு செரிமானமாகும் போது குடலில் வாயுக்கள் உற்பத்தியாகும்.இந்த வாயுக்கள் மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.ஆனால் சில வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை துர்நாற்றம் நிறைந்த கெட்ட வாயுக்களாக மாறி மலக் குடல் வழியாக சிரமப்பட்டு வெளியேறும்.
இவ்வாறு வாயுக்கள் வெளியேறுவது ஆபத்தான நிலை ஆகும்.புளித்த ஏப்பம்,வயிற்றுவலி,வயிறு வீக்கம்,மார்பு பகுதியில் குத்தல் உணர்வு போன்றவை கெட்ட வாயுக்கள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
குடல் அலர்ஜி,குடலில் அமிலம் அதிகமாதல்,குடல் புற்றுநோய் போன்ற காரணங்களாலும் வாயுத் தொல்லை அதிகமாகிறது.
கெட்ட வாயுக்களை வெளியேற்றும் வீட்டு வைத்தியம்:
1)வேப்பம் பூ
ஒரு கைப்பிடி வேப்பம் பூவை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இந்த நீரில் வேப்பம் பூ பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை அகலும்.
1)பெருஞ்சீரகம்
2)சீரகம்
3)சுக்கு பொடி
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு சுக்கு பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் அகலும்.