நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்பு மூளைதான்.மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.மூளையின் செயல்திறன் அதிகமாக இருந்தால் எதையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும்.
அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்ய முடியும்.படிக்கும் மாணவர்களுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
உடல் இயக்கத்தையும்,எண்ணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியம்.நம் சிந்தனைகள் தெளிவு இல்லாமல் இருந்தால் நம்மை முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள்.ஒருவர் முட்டாள்,புத்திசாலி என்பது அவரின் மூளையின் செயல்திறனை பொறுத்துள்ளது.
நம் மூளை இரண்டு வகையாக உள்ளது.ஒன்று பெரு மூளை மற்றொன்று சிறு மூளை.நாம் மேற்கொள்ளும் எல்லா விஷயங்களும் மூளையின் கட்டளையால் தான் நடைபெறுகின்றது.இப்படி பல்வேறு வேலைகளை செய்யும் மூளையின் செயல்திறன் குறைய நாம் செய்யும் தவறுகளே காரணம்.
அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டால் நமது மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.அதேபோல் அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் மோசமாவதோடு மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.
தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக நேரம் மொபைல் பயன்படுத்துதல்,ஹெட் செட்,ஹெட் போன் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் மூளையின் செயல்திறன் குறைகிறது.
மூளையின் செயல்திறன் அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:
பாதாம்,வால்நட் போன்ற உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.