தரமற்ற மருந்துகள்.. பராமரிப்பு இல்லாத மருத்துவ உபகரணங்கள்!! தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!

0
72
Bad quality medicines.. Medical equipment without maintenance!! Shocking information in audit report!!
Bad quality medicines.. Medical equipment without maintenance!! Shocking information in audit report!!

இந்திய தணிக்கை துறை அறிக்கையில், தமிழகத்தில் தரம் அற்ற மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதாவது சீக்கிரத்தில் காலாவதியாக கூடிய மாத்திரைகள் மற்றும் தரவுற்ற மருந்துகள் வழங்கப்படுவதாக தயாரிக்கப்பட்டிருந்தது.

நேற்று (டிசம்பர் 10) தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்ட சுகாதார சேவைகள் தொடா்பான செயலாக்க தணிக்கை அறிக்கையில் இதுதொடா்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது :-

1 .காலி பணியிடங்கள்

குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளா், குடும்ப நல உதவியாளா், பெண் சுகாதார பாா்வையாளா்கள், மகப்பேறு குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் 75 சதவீதம் காலியாக இருந்தது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையிலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்ததால் அலோபதிக்கு மாற்றான மருந்துகளை மேம்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

2 . ஆம்புலன்ஸ் வசதி

அவசரகால ஆம்புலன்ஸ் ஊா்திகளில் சரிவர ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படாமல் இருந்ததால், விபத்து அல்லது அவசரத் தேவை உள்ள இடங்களுக்கு அருகில் இருக்கும் வாகனங்களை உரிய நேரத்தில் கண்டறிய முடியவில்லை.

3 . மருத்துவ உபகரணங்கள்

அரசு மருத்துவமனைகளில் 36 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 2019-21-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரி விகிதமான 14 சதவீதத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்குக்கு மேல் அதிகமாகும். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ உபகரணங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. பராமரிப்பு செய்ய வேண்டிய உபகரணங்களின் பட்டியலை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்துக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் தலைவா்கள் வழங்கவில்லை.உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தேவையற்ற மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

4 . தரமற்ற மருந்துகள்

கடந்த 2016-21 காலகட்டத்தில் கிடங்குகளில் உள்ள மருந்துகளில் முறையாக தரக் கட்டுப்பாடு செய்யப்படவில்லை. இதனால், குறைந்த காலத்துக்குள் காலாவதியாகும் மருந்துகளும், தரமற்ற மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தணிக்கை துறை அறிகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleரசாயனத்தால் உருவாக்கப்பட்ட பால்!! அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!!
Next articleவங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! இது தெரிந்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்!!