குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.உணவு உட்கொண்ட பிறகு வாயை கொப்பளிக்க தவறுதல்,பற்களை முறையாக சுத்தம் செய்யாதிருத்தல்,நாக்கில் அழுக்கு படிதல்,சொத்தைப்பல் போன்றவற்றால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம்.
தீர்வு 01:
கொத்தமல்லி விதை
வாய் துர்நாற்றத்தை போக்க கொத்தமல்லி விதை உதவும்.ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும்.
தீர்வு 02:
பெருஞ்சீரகம்
கற்கண்டு
ஒரு தேக்கரண்டி சோம்பு அதாவது பெருஞ்சீரகம் மற்றும் சிறிது கற்கண்டை ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
வாயில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தால் இந்த சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.இவ்வாறு செய்தால் வாய்துர்நாற்றம் முழுமையாக அகலும்.
தீர்வு 03:
கிராம்பு
பட்டை
ஒரு கிராம்பு மற்றும் ஒரு துண்டு பட்டையை வெறும் வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடுங்கள்.இப்படி செய்தால் வாயில் துர்நாற்றம் நீங்கி மணக்கும்.
தீர்வு 04:
ரோஜா பூக்கள்
பட்டை
கிராம்பு
சோம்பு
உலர்ந்த ரோஜா இதழ்கள் ஒரு கைப்பிடி,இரண்டு துண்டு பட்டை,பத்து கிராம்பு(இலவங்கம்),ஒரு தேக்கரண்டி சோம்பை பொடியாக அரைத்து ஒரு டப்பாவில் சேமித்துக் கொள்ளுங்கள்.
வாயில் துர்நாற்த்தை உணரும் போது இந்த பொடியை சாப்பிடுங்கள்.இப்படியும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.