ஆண்மையை அதிகரிக்கும் BADAM PISIN.. வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது!!

Photo of author

By Gayathri

ஆண்மையை அதிகரிக்கும் BADAM PISIN.. வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது!!

Gayathri

Updated on:

badam-pisin-increases-masculinity-what-else-is-it-used-for

பாதாம் மரத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை தான் பாதாம் பிசின் என்று பயன்படுத்துகின்றோம்.இது பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது.பாதாம் பருப்பை போன்றே அதன் பிசினிலும் ஏகப்பட்ட புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது.

அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் பாதாம் பிசின் பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த பாதாம் பிசினை வைத்து சுவையான ரெசிபி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி

2)பால் – ஒரு கப்

3)தேன் – இரண்டு தேக்கரண்டி

4)ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

*கிண்ணம் ஒன்றை எடுத்து இரண்டு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டுக் கொள்ளுங்கள்.

*பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊற விடுங்கள்.பிசின் நன்கு ஊறி வந்ததும் மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

*அடுத்து ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழ்களை பாதாம் பிசினில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

*பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி குறைவான தீயில் நன்கு காய்ச்சவும்.பால் வாடை நீங்கும் வரை காய்ச்சிய பிறகு அரைத்து வைத்துள்ள பாதாம் பிசின் கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.தேனிற்கு பதில் பனங்கற்கண்டு சேர்க்கலாம்.ஆனால் சர்க்கரை மட்டும் பயன்படுத்தக் கூடாது.

இந்த பாதாம் பிசின் பாலை தினந்தோறும் பருகி வந்தால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.ஆண்மை குறைபாடு,செரிமானப் பிரச்சனை,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் சரியாகும்.