டோக்கியோ ஒலிம்பிக்! காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து!

Photo of author

By Sakthi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று தற்சமயம் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் காலை நடந்த 3வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து டான் மார்க்கின் மியா பிலிசெல்ட்டை எதிர்கொண்டார். தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 13வது இடத்தில் இருக்கும் மியாபிலிசெல்ட்டை சந்தித்தது அதிக எதிர்பார்ப்பை தூண்டியது.

இதில் பிவி சிந்து 21 ஆக்கு 15 21க்கு 13 என நேர் செட் கணக்கில் வெற்றி அடைந்து காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் கொரியாவின் 12வது இடத்தில் இருக்கும் வீராங்கனை அல்லது ஜப்பான் நாட்டின் நான்காவது தர வரிசையில் இருக்கும் வீராங்கனையை எதிர் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் கொரியாவின் வீராங்கனையும், ஜப்பானின் வீராங்கனையும், தற்சமயம் எதிர் கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த போட்டியில் வெல்பவர் யாரோ அவருடன் பிவி சிந்து காலிறுதியில் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.