Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு 

0
350
Bakasuran First Look Release
Bakasuran First Look Release

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு

Bakasuran First Look Release

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான மோகன் திரௌபதி திரைப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டார்.அவர் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்போது பகாசூரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் ஆரம்பித்த பகாசூரன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியிருந்தது.

Bakasuran First Look Release - பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு 

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் படம் ‘பகாசூரன்’. இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக தாராக்‌ஷி நடித்துள்ளார். இவர்கள் தவிர ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி மற்றும் சசிலையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ‘பழைய வண்ணாரப்பேட்டை’ , ‘ருத்ரா தாண்டவம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சேலத்தில் தொடங்கிய ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதை படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Bakasuran First Look Release
Bakasuran First Look Release

இதனைத்தொடர்ந்து படத்தை செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவரவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

https://twitter.com/mohandreamer/status/1562643316902363136/photo/1

இந்நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் முதல்பார்வை நாளை வெளியாகும் என இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

Previous articleஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! 28ல் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!
Next articleஅரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here