அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

0
112

தமிழ்நாட்டின் மின்கட்டண உயர்வு குறித்து கருத்துக் கூட்டங்கள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டனர். எந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் போன்ற ஒரு சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்கள். சட்டத்துறையைச் சார்ந்த உறுப்பினர் நியமனம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து மின்வாரியம் சார்பாக ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் நம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட துறையை சார்ந்த உறுப்பினரை நியமனம் செய்யும் வரையில் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கவும், கருத்து கேட்டு கூட்டம் நடத்தவும், தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெங்கடசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த மே மாதம் 5ம் தேதி ஓய்வு பெற்று விட்டார். தொழில்நுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி ராஜினாமா செய்திருக்கிறார். இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் தெரிவித்த நீதிபதி அந்தக் குழு 2 பேரை பரிந்துரை செய்திருக்கிறது. இதில் வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் சென்ற மாதம் 18ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் என கூறியிருக்கிறார் நீதிபதி.

மேலும் மனுதாரர்கள் சார்பாக இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என கூறியிருக்கிறார்கள்.

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமனம் செய்த அதே சமயத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும், அந்த பதவியில் நியமனம் செய்திருக்கலாம் என்று வாதம் செய்துள்ளார்கள்.

ஆகவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த விதத்தில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது அந்த பதவிக்குரிய நபரை நியமனம் செய்யாதது நியாயமில்லை மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே சமயத்தில் நியமனம் செய்வதற்கு மாநில அரசுக்கு எந்த விதமான தடையும் இல்லை ஆனாலும் மாநில அரசு அதனை செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரணத்திற்காக, தமிழக மின் மாதிரி ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும். வரையில் மேலே சொல்லப்பட்ட கட்டண உயர்வுக்கு அனுமதி கூறும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார் நீதிபதி சுவாமிநாதன்.

மின் கட்டண உயர்வு குறித்து தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம் என்று தெரிவித்த அவர் ஆனாலும் சட்ட உறுப்பினரை நியமித்த பிறகு தான் இந்த தடை உத்தரவு காலாவதியாகும் என தெரிவித்துள்ளார்.

மனுதாரர்கள் தங்களுடைய கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.