‘நான் யார் தெரியுமா’ பாக்யலஷ்மி ஜெனி மற்றும் இனியாவின் அட்ராசிட்டிஸ்!!

0
220

‘நான் யார் தெரியுமா’ பாக்யலஷ்மி ஜெனி மற்றும் இனியாவின் அட்ராசிட்டிஸ்!!

கோலிவுட் சின்னத்திரையில் மிக பிரபலமான சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக செழியன் என்ற வேலு லக்ஷ்மணன் நடிக்கிறார். பாக்யலஷ்மி தொடரில் இவர்கள் இருவரும் சிறுவயது முதல் நண்பர்களாக உள்ளனர். பின் அந்த நட்பு இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், ஜெனி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறுகிறார்.

ஜெனி கூறியது பாக்யலட்சுமிக்கு தெரிந்து பின், இரு குடும்பத்தையும் அவர் சமாதானம் செய்து திருமணம் நிகழ்கிறது. பின் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.ஆனாலும் அவர்கள் குடும்பத்தில் யாரும் ஜெனியை ஏற்றுக்கொள்ளவில்லை.

https://www.instagram.com/reel/CR88A3fBCJQ/?utm_source=ig_web_copy_link

சிறிது நாட்களுக்கு பிறகு ஜெனியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின் செழியனுக்கும், ஜெனிக்கும் இடையே சிறிய சிறிய சண்டைகள் வந்து சமாதானம் ஆகி முடிந்தது.இந்த நிலையில், தற்போது இந்த தொடரில் இவர்கள் இருவருக்கும் இடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு சண்டையும், சச்சரவுமாக உள்ளனர்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.மேலும், தற்போது ஜெனி மற்றும் அவருடன் நடிக்கும் இனியா இருவரும் சேர்ந்து ஒரு டையலாகுக்கு நடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அது பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

Previous articleபோலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!
Next article‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here