பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!

Photo of author

By Jayachithra

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலமாக அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். அப்போது அவருக்கு 19 வயது ஆகும். அதன் முன் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக தேசிய விருதையும் இவர் பெற்றார். அதற்கு பிறகு தமிழ் மற்றும் ஹிந்தி என அவர் இசையில் இசை உலகமே அதிர்ந்து போனது. மேலும் அவருக்கு இசை புயல் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

அவரின் இசைக்காக பாலிவுட் தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர். அதனை அடுத்து சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்து உள்ளார். இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் என்கிற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். மேலும் இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேட்டனர். அதற்கு நடிகர் பாலகிருஷ்ணன், அவர் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகளை என் தந்தை என்டிஆரின் கால் விரலுக்கு அது சமம் என்று கூறியுள்ளார்.

மேலும் எந்த ஒரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் சினிமாத துறைக்கு செய்ததை விட பெரியது அல்ல என்று அவர் பேசியுள்ளார். அதனை கேட்ட சினிமா திரையுலகினர் மற்றும் அவர்களின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.