இக்காலகட்டத்தில் பலருக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சனை முடி உதிர்வு தான்.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் அதிகளவு முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை அடைய நேரிடுகிறது.எனவே முன்நெற்றி பகுதியில் முடி வளர கீழாநெல்லி எண்ணெய் காய்ச்சி தடவுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கீழாநெல்லி இலை – ஒரு கைப்பிடி
2)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
எண்ணெய் தயாரிக்கும் முறை:
ஸ்டெப் 01:
முதலில் கீழாநெல்லி இலை ஒரு கைப்பிடி அளவு பறித்து வைக்க வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து கீழாநெல்லி இலையை பொடியாக நறுக்கி ஒரு துணியில் பரவலாக கொட்டி நாள் முழுவதும் உலரவிட வேண்டும்.
ஸ்டெப் 03:
கீழாநெல்லி இலையில் ஈரம் இல்லாமல் உலர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு கால் லிட்டர் அதாவது 250 மில்லி கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும்.
ஸ்டெப் 05:
எண்ணெய் சூடானதும் உலர்த்தி வைத்துள்ள கீழாநெல்லி இலைகளை அதில் கொட்டி மிதமான தீயில் எண்ணெய் காய்ச்ச வேண்டும்.
ஸ்டெப் 06:
தேங்காய் எண்ணெய் நிறம் பச்சை நிறத்திற்கு மாறும் வரை காய்ச்சி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
ஸ்டெப் 07:
பிறகு இந்த கீழாநெல்லி எண்ணெய் நன்றாக ஆறவைத்து பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்துக் கொள்ள வேண்டும்.
இந்த கீழாநெல்லி எண்ணெயை தினமும் முன் நெற்றி பகுதியில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் புதியதாக வளரும்.முன் நெற்றி பகுதியில் சொட்டை விழுந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.