தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!
தேவையான பொருட்கள் :பொருள்அளவு பால் இரண்டு லிட்டர் சர்க்கரை முக்கால் கிலோ நெய் தேவையான அளவு.
செய்முறை :அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். . பால் கொதித்து வர ஆரம்பித்ததும் சர்க்கரை கொட்டி நன்கு கிளற வேண்டும்.பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.
மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில் பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.பின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.
இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே மற்றொரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும். பால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விட வேண்டும் இவ்வாறு செய்தால் அவை இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.