தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

0
194

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முன் தினம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும் அந்த கூட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும்  ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அனைவரும் கோவில்களின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

Previous articleஇந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணி!
Next article30 கோடியை கடந்த நோய்த் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here