30 கோடியை கடந்த நோய்த் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!

0
73

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வெளியான நோய்த்தொற்று பரவல் தற்போது உலக நாடுகள் முழுவதும் ரவி உலக நாடுகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது உலகில் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த்தொற்று பரவல் பரவியிருக்கிறது இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக, உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது, மிகப்பெரிய பணக்கார நாடுகள் எல்லாம் இந்த நோயில் சிக்கி தடுமாறி வருகின்றன.

இந்த நிலையில், இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், உலக அளவில் நோய்தொற்று பாதிப்பு 30 கோடியைத் தாண்டியிருக்கிறது.

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் எண்ணிக்கை 25.73 கோடியை தாண்டி இருக்கிறது. அதோடு இந்த நோய்த்தொற்று தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 54.88 லட்சத்தை கடந்திருக்கிறது.

இந்த நோய் தொற்று தாக்குதலுக்கு ஆளானவர்களில் 3 கோடிக்கும் அதிகமான ஒரு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 92 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.