அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சம்பளத்தை திரும்ப கொடுக்குமாறு கூறியிருந்தனர்.
இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கானது நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், சமூகத்தின் பார்வையில் அரசு வேலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வாறு பணி நியமனம் ரத்தானது மக்களின் நம்பிக்கையை வீணடித்து விடும்.
அதேபோல அரசு வேலைகளில் பணி நியமனம் செய்வது குறித்து தரவுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இவ்வாறு பணி நியமனம் தடையானது ஏற்றுக் கொள்ளப்படாது. மேற்கொண்டு சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் இந்த ஊழல் உண்மை எனக் கூறும் பட்சத்தில் இதன் தடையானது செல்லுப்படியாகும். அதன் வரையில் சம்பளத்தை திரும்ப பெறுவதோ அல்லது பணி நியமனம் ரத்து செய்யப்படுவதோ ஏற்றுக் கொள்ளப்படாது எனக் உயர் நீதிமன்றம் தடை விதித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.