16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்திலேயே ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.மேலும் 70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்தது.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் ஆறு வயதிற்கு உட்பட்ட 99 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருவதினால் இந்தோனேசியா அரசு இரும்பல் மருந்துகள் விற்பனையை தடை செய்தது.
மேலும் திரவ நிலையில் உள்ள மருந்துகளில் தான் நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.இந்நிலையில் இந்திய மருத்துவ நிறுவனங்கள் நேபாளத்திற்கு அத்தியாவசிய மற்றும் வாழ்வில் நடைமுறைக்கு தேவையான மருந்துக்களை ஏற்றுமதி செய்ய விண்ணப்பித்திருந்தன.
இந்த விண்ணப்பம் அளித்த மருத்துவ நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு நேபாள மருத்துவ ஆய்வாளர்கள் குழு கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவிற்கு வந்தனர்.மேலும் மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்த குழுவினர் நேபாள முகவர்களுக்கு தகவல் ஒன்றை அனுப்பினார்கள்.
அதில் கூறியதாவது இந்தியாவை சேர்ந்த ரேடியன்ட் பேரன்டெரல்ஸ் லிமிடெட்,மெர்குரி லேபரட்டரீஸ் லிமிடெட், அலையன்ஸ் பயோடெக்,கேப்டாப் பயோடெக்,அக்லோமெட் லிமிடெட்,ஜீ லேபரட்டரீஸ் லிமிடெட், டாபோடில்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ஜிஎல்எஸ் பார்மா லிமிடெட், யுனிஜீல்ஸ் லைப் சயின்ஸ் லிமிடெட்,கான்செப்ட் பார்மாட் ஆகிய 16 நிறுவனங்களின் மருந்துகளை நேபாளத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது விற்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி நடைமுறையை பின்பற்றவில்லை. அதனால் தான் நேபாள அரசு இந்த மருந்துக்களை தடை விதித்துள்ளனர் என கூறப்படுகின்றது.இதனையடுத்து குளோபல் ஹெல்த் கேர் தயாரித்த 5மி.லி மற்றும் 500 மி.லி சுத்திகரிப்பான்களை நேபாளத்திலிருந்து திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.