அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
130
CBSE syllabus from next year in govt schools!! Important information released by the government!!
CBSE syllabus from next year in govt schools!! Important information released by the government!!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

அரசு பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்துக்கு பதிலாக சிபிஎஸ்இ
பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப் படும் என்று
புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டத்தில் சி.சி.இ என்ற செயல் வழிக் கற்றல் முறை
அமல்படுத்தப் படுகிறது.

1 முதல் 10 வகுப்பு வரை சிறப்பு பாடங்களும் நடத்தபடுகின்றன. இதற்கென 22 ஆசிரியர்கள்
பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு சரியான
பாடத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் பாடத்திட்டம்
காணாமல் போனதாகவும் தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம் புகார்
அளித்தது.

இதனால் பள்ளி கல்வித்துறை அனைவருக்கும் கல்வி
இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி புதிய பாடத்திட்டம்
தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதில் ஒவ்வொரு பாடவாரியாகவும் ஆசிரியர் இடம்
பெற்றுள்ளனர். இதனை அடுத்து புதிய பாடத்திட்ட தயாரிப்பு பணி
தொடங்கிய நிலையில் புதிய பாடத்திட்டமானது சி.பி.எஸ்.இ
பாடத்திட்டத்திற்கு இணையாகவும், தனியார் கல்வியினை மிஞ்சும்
வகையிலும் காலத்திற்கு ஏற்ற புதுமைகளுடனும் தயாரிக்கப்பட்டு
உள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தில் புதுச்சேரி அரசு
பள்ளிகள் சேர விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை
ஒன்றினை மாநில கல்வித்துறை அனுப்பியுள்ளது.சி.பி.எஸ்.சி பாட
திட்டத்தில் சேர அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை
பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ  பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான ஆவணங்களுடன் நாளைக்குள் சமர்பிக்க
வேண்டும் என்றும் அறிக்கை அனுப்பியுள்ள நிலையில் புதுச்சேரி
அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு
பதிலாக சிபிஎஸ்இ  பாடத்திட்டம் அமலாகும் என்று புதுச்சேரி அரசு
முடிவு செய்துள்ளது.