தமிழகத்தில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மலை ஏற்றம் செய்வதற்கான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15 வரை டிரக்கிங் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற 40 இடங்களில் ட்ரக்கிங் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கி நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த 40 இடங்களிலும் ட்ரக்கிங் செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. தற்பொழுது நிலவிவரும் அதீத வெயிலினுடைய தாக்கத்தினால் மழைக்காடுகளில் காட்டு தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் இந்த முடிவினை தமிழக அரசு காட்டு தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மலைகள் மற்றும் மலைகள் சார்ந்த காடுகளில் ட்ரக்கிங் செய்வதற்காக தமிழக அரசு www.trektamilnadu.com என்ற இணையதள பக்கத்தை துவங்கி நடத்தி வந்த நிலையில் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த இணையதளம் மூலம் ட்ரக்கிங் செய்வதற்கான புக்கிங் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை மண்டலத்தின் உடைய பாதுகாப்பை கருதி இந்த முடிவை தமிழக அரசு மற்றும் வனத்துறை இணைந்து எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.