மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை பார்க்க தடை!! தமிழக அரசு திடீர் உத்தரவு!!
நாளை குடியரசு தின விழாவானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்ற உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த முறை தமிழக அலங்கார ஊர்தியானது நிராகரிக்கப்பட்ட நிலையில் இம்முறை பெண்களை பறைசாற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியானது செங்கோட்டையில் ஊர்வலமாக வரவுள்ளது.
இதனையொட்டி தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கொடியேற்ற இருப்பதை அடுத்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை ஆளுநர் சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்ற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களில் பலத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறப்பு காவலர்கள் கொண்டும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
முக்கிய தளங்கள் மற்றும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நாளை வரை சென்னையில் எந்த இடத்திலும் ட்ரோன் கேமராக்கள் பறக்க கூடாது என்று தடைவிதித்தும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இன்று முதல் நாளை வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் வழக்கம் போல் பொதுமக்கள் தலைவர்களின் நினைவிடங்களை பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.