சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு உகந்த “வாழைக்காய் புட்டு”!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

Photo of author

By Divya

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு உகந்த “வாழைக்காய் புட்டு”!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் காய்களில் ஒன்று வாழைக்காய்.இதில் அதிகளவு பொட்டாசியம்,மக்னீசியம்,மாங்கனீசு,வைட்டமின் பி6 மற்றும் சி,நார்ச்சத்துகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.இந்த வாழைக்காயை அடிக்கடி உணவாக எடுத்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வாழைக்காய் – 2

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 3

*பெருங்காயம் – 2 சிட்டிகை அளவு

*உப்பு – தேவையான அளவு

*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

முதலில் வாழைக்காய் 2 எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இந்த இரண்டு வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

இவை பாதி வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த வேக வைத்த வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு புட்டு அரிப்பில் நன்கு துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு,1 தேக்கரண்டி உளுந்து பருப்பு,3 வர மிளகாய்,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்னர் துருவி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறி விடவும்.அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும்.

இறுதியாக 2 சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து வாழைக்காய் புட்டு வெந்து வந்த உடன் அடுப்பை அணைக்கவும்.