இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்

0
168

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்துள்ளது

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்குள் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் மிகவும் சுமாரான ஆட்டத்தையை வெளிப்படுத்தியதால் வங்கதேச அணி 58.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது

வங்கதேச கேப்டன் மொய்னுல் ஹக் 37 ரன்களும், ரஹீம் 43 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும். தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்மான் இஸ்லாம், இம்ருல் காயீஸ் ஆகியோர் தலா 6 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது

இந்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்தால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது

Previous article9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
Next articleஅசுர வளர்ச்சியை கொடுத்த ஐஆர்சிடிசி நிறுவனம்! ஒரே மாதத்தில் 200 சதவீத லாபம்