உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், குருப் ‘ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் இலங்கை அணியும், 2 வெற்றிகளுடன் நமீபியா அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. குருப் ‘பி’ பிரிவில் 3 வெற்றிகளுடன் ஸ்காட்லாந்து அணியும், 2 வெற்றிகளுடன் வங்கதேசம் அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக முகமது நைம் 52 பந்துகளில் 62 ரன்களும், அதிரடியாக விளையாடிய முஷ்ஃபிகூர் ரகிம் 37 பந்துகளில் 57 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரோடு மறுமுனையில் முகமதுல்லா 5 பந்துகளில் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 171 ரன்கள் எடுத்திருந்து.
பின்னர் 172 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணியில் முதல் ஓவரிலே குசால் பெரேரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷான்கா மற்றும் சரீத் அசலன்கா அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் 24 ரன்களுக்கு பதும் நிஷான்கா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் இருந்த சரித் அசலன்கா பானுக்கா ராஜபக்சேவுடன் கூட்டனி அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
ராஜபக்சே 31 பந்துகளில் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அசலென்கா 49 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது