சீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் – ஏன் தெரியுமா?

0
145

இந்தியாவில் இருந்து பல அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முறை பயன்படுத்தும் கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்து வங்கதேசத்திற்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வங்கதேசம், 20 லட்சம் முறை உபயோகிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கு வங்கதேசம் மறுத்து விட்டது. ஏனெனில், சீனாவின் நிபந்தனை – வங்கதேசத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அது என்ன நிபந்தனை என்றால், “சோதனைக்கான செலவுகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சீனா நிபந்தனை விதித்துள்ளதாம்.

இந்த நிபந்தனையை ஏற்க இயலாத வங்கதேசம் சீனாவின் சைனோவாக் என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் சீனாவை மறுத்துவிட்டு இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதற்கு முடிவு எடுத்துள்ளது வங்கதேசம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!
Next articleராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி