சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்!
தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒன்றா வீட்டில் அல்லது வெளியிடங்களில், பெண்கள் என்னதான் செய்வார்கள். எதற்கும் இல்லை என்று சொல்லக்கூடாது, அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி சொல்லும் போது பெண்கள் என்னதான் செய்ய முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியுமா அவர்களும் ஒரு மனுஷ ஜென்மம் தானே? ஏதோ ஒரு முறையில் பெண்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே சமுதாயத்தின் வேலையாக போய்விட்டது.
ஒரு குடிகார கணவன் குடிக்க காசு கொடுக்கவில்லை என்பதற்காக எல்லாம் கொலை செய்யும் அளவிற்கு சமுதாயம் சீர்கெட்டு போய் இருக்கின்றது. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் பாடியில், கலைவாணர் நகரில், மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் மனோ பாரதி. 37 வயதான இவர் எஸ்பிஐ வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.இவரது கணவன் அச்சுதனன். 41 வயதான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவருகிறார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மாலை போதையில் இருந்த அச்சுதனன் மீண்டும் குடிப்பதற்காக, தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது தரமறுத்த மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இருந்தபோதும் மனைவி பணம் கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில், வெறியேறிப் போய் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து அவரது மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த மனோ பாரதி அலறி துடித்து அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். அந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோபாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஜே ஜே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், ஜெயபாரதியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.