பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Photo of author

By Gayathri

பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Gayathri

Bank of India surpasses Banner G SBI achievement!!

முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு உலகம் முழுவதும் 22,542 கிளைகள் உண்டு. மேலும் இது இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி. இந்த வங்கியில் இரண்டரைலட்சத்துக்கும் மேல் பணியாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் இதன் சொத்து விகிதத்தில் 23 சதவீதம் சந்தை பங்களிப்பும், கடன் மற்றும் டெபாசிட்டிகளில் 25 சதவீதம் பங்களிப்புகளை கொண்டுள்ளது. இதுவே இந்தியாவின் மிக அதிக மற்றும் நம்பகத்தக்க வங்கியாக செயல்பட்டு வருகின்றது.

தற்சமயம் இது உலக அளவிலும் நான்காம் இடத்தை பிடித்து அமெரிக்காவை பின் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் உலக அளவில் பேனர் பேங்க் வங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலை அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் 66 வெளியிட்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி அமெரிக்காவின் பங்குச்சந்தையில் தவறான முதலீடு செய்ததற்காக எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்திருந்தது. எஸ் பி ஐ வங்கி மக்களின் வரிப்பணம் மூலம் அபராதத்தை கட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அமெரிக்காவை வங்கி தர வரிசையில் பின் தள்ளி உள்ளது பெருமைக்குரியதே!