இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஒரு மாதம் காலம் முன்பிருந்தே தயாராகி வந்தது.இவ்வாறு இருக்கையில் போரின் முதல் அறிகுறியாக தனது படையை ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் நிறுத்தியது.படையை நிறுத்திய அடுத்த நாளே போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அதுமட்டுமின்றி நமது இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே போர் நடப்பதில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.அனைத்து நாடுகளும் போரை கைவிடும்படி ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகிறது.
மறுபக்கம் அங்கு சிக்கிய மருத்துவ மாணவர்களை மீட்பதில் அனைத்து நாடுகளும் தீவீரம் காட்டி வந்தது.அவ்வாறு மீட்ட போதிலும் இந்தியாவை சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் இந்த போரால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.இவ்வாறு இருக்கையில் அனைத்து நாடுகளும் உக்ரைன் மீது நடத்தப்படும் போரை நிறுத்த கோரி பொருளாதார தடையை விதித்து வருகிறது.அந்தவகையில் அமெரிக்காவில் மெக் டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், கோக-கோலா, பெப்சி, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, அல்ஷயா குரூப், கேப்சி, பிசா ஹட் மற்றும் பர்கர் கிங் என அனைத்து உணவு மற்றும் எலக்ட்ரிக் நிறுவனங்கள் ரஷ்யா மீது தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த போரை நிறுத்த வேண்டுமென்றால் நாங்கள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ரஷ்யா கோரியது.ரஷ்யா மக்கள் அதிகமுள்ள இரண்டு பகுதிகளை தனி குடியரசாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டது.அதுமட்டுமின்றி அதேபோல நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது என்றும் தெரிவித்தது.உக்ரைன் ரஷ்யா கூறிய நிபந்தனைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பை மட்டுமே தெரிவித்து வந்தது.நேட்டோ அமைப்பும் உக்ரைன் நாட்டை சேர மறுப்பதாக தெரிவித்து,உக்ரைன் அதிபர் நாங்கள் நேட்டோவில் சேரும் முயற்சியை கைவிடுகிறோம் என்று கூறினார்.
இவ்வாறு பல பரப்பான சம்பவங்கள் நடக்கும் வேளையில் நேற்று எதிர்பார்க்க விதமாக ரஷ்யா மனிதாபிமானமின்றி மகப்பேறு மருத்துவமனை மீது போர் தொடுத்தது.இதனால் அனைத்து நாடுகளும் ரஷ்யா மீது கொந்தளிக்க ஆரம்பித்தது.அதன் விளைவாக இனி அமெரிக்கா வங்கிகள் ரஷ்யாவில் இனி செயல்படாது என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி சோனி மியூசிக் தனது அனைத்து செயல்பாடுகளையும் ரஷ்யாவில் நிறுத்துவதாக கூறியுள்ளனர்.அதனால் இனி சோனி நிறுவனங்கள் செயல்படாது என்று தெரிவித்துள்ளனர்.