இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

0
212

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது.

இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கடந்த வாரம் 4-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி இதில் டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன்பின் விளையாடிய இலங்கை அணி தன்னுடைய முதல் இன்னின்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்த இலங்கை அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் இரண்டு  மணிக்கு தொடங்குகிறது.

Previous articleஇனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!
Next articleபெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறாரா சசிகலா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here