மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை!
மாதம்தோறும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை கணித்து அனைத்து வங்கிகளுக்கும் ஒப்படைத்து விடுகிறது. அந்த வகையில் வங்கிகளும் விடுமுறை நாட்களிளை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். ஏனென்றால் வங்கி விடுமுறை நாளன்று மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய இயலாத காரணத்தினால் முன்கூட்டியே மக்களுக்கு அதனை பற்றி தெரிய படுத்துகின்றனர்.அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களாக விடுமுறை தினத்தை அறிவித்திருந்தது.
தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி எட்டியுள்ள நிலையில் 7 நாட்கள் மட்டுமே வங்கிகள் விடுமுறை எடுத்துள்ளனர்.மீதமுள்ள நாட்கள் எந்த தேதிகளில் வர உள்ளது என்பதை தற்பொழுது ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த விடுமுறை தினங்கள் அனைத்தும் ஒரே நாளில் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதில்லை.அதனால் மாநிலம் வாரியாக அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு ஏற்றவாறு விடுமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளது.அந்த வகையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி 4வது சனிக்கிழமை அதனையடுத்து ஆகஸ்ட் 22 மற்றும் 29 ஞாயிற்றுக்கிழமை ஆகும்.இதனை தவிர்த்து மற்ற நாட்கள் மாநிலம் வாரியாக பண்டிகை தினங்களை விடுமுறையாக வங்கிகள் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஆகஸ்டு 1ஆம் தேதி திருவோணம் தினமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சி பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.அதேபோல ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி இதுவும் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.ஜென்மாஷ்டமி அல்லது கிருஷ்ணஜெயந்தி இது அகமதாபாத் ,சண்டிகர் ,சென்னை போன்ற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி இது ஹைதராபாத் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.இந்த தினங்களில் இந்த பகுதிகளில் உள்ள வங்கிகள் இயங்காது என கூறியுள்ளனர்.குறிப்பாக ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் ஜெய்பூர் ஜம்மு ,கான்பூர் லக்னோ ,ராய்ப்பூர் ,ராஞ்சி, சிம்லா, கேங்டாக் போன்ற பகுதிகளில் முற்றிலும் வங்கிகள் விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளனர்.அதனால மக்கள் அனைவரும் இந்த விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவே நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள் என வங்கிகள் கூறியுள்ளது.