நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

0
227

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

தற்போது இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் ஊழியர்களின் ஊதியம் ,வேலை ,ஒப்பந்தம் ,ஒப்பந்தம் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளில் கணினி மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது.

சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.மேலும் சில வங்கிகளில் ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு வங்கிகளில் மட்டும் 3000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகின்றது.இவ்வாறு செய்வது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாக உள்ளது. அதனையடுத்து சில வங்கிகளில் பணத்தை பெற்று ஊழியர்கள் ,துப்புரவு ஊழியர்கள் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் அயல்பணி வாயிலாக தனியாருக்கு வழங்க முடிவு செய்யதுள்ளனர்.

ஒரு முன்னணி வங்கி ,பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் உள்ள 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டையும் வழங்கவில்லை. அதனால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர் சங்கம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மேலும் நாளை மறுநாள் தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.இந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காணவில்லை என்றால் வரும் நவம்பர் 19 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleமயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!
Next articleநேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here