நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் !

0
75

நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் !

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.  எப்போதும் ஒரு ரோஜா பூவை தன் சட்டையில் குத்தி வைத்திருப்பார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டை முன்னேற்றுப் பாதையில் கொண்டு செல்ல கல்வி முக்கியமானது என்று நேரு புரிந்து கொண்டார். கல்வியே இந்த நாட்டை மேம்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பியதால் கற்றலுக்கு ஏதுவாக கல்வி துறையை சீர்படுத்தினார். நேருவின் கல்விக் கொள்கையானது காரல் மார்க்ஸ் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளின் படி அமைந்தது.

 இதனால் இந்திய அரசின் திட்டங்களை வகுத்த போது இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசம் மற்றும் கட்டாயமானது என்பதை உறுதிப்படுத்தினார் நேரு மாமா.

அதனால் நேரு மாமா பிறந்தநாள் இன்று நாம்அனைவரும் நமது குழந்தைகளை பரிசு மற்றும் கிரீட்டிங் கார்டு கொடுத்தோ அல்லது குழந்தையின் கரங்களை பிடித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம். பெற்றோர்கள் தமது குழந்தைகளை கீழ்வரும் கவிதைகள் கூறி வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.

 “ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ் வைத்து, கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு வாழ்த்துக்கள்”

“யாவையும் அச்சரியமாக பார்ப்பதில், குழந்தைகளே இரசனை மிகுந்தவர்கள்”

 “இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா”

“பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ ஆனால், மழலை குழந்தை சிரிப்பில் தினந்தோறும் பூக்கிறது குறிஞ்சி.”

 “இறைவன் படைப்பில் அனைவரும் நல்லவர்களே,

குழந்தை பருவத்தில்…!”

“கண்கள் பார்த்த முதல் ஓவியம்

கைகள் வருடிய முதல் காவியம்

உதடுகள் உச்சரித்த முதல் வார்த்தை

உள்ளம் உணர்ந்த முதல் பாசம்

குழந்தை மீதான தாய் அன்பு…”

அனைவருக்கும் இனிய குழந்தை தின நல்வாழ்த்துகள்.

 அது மட்டுமின்றி அருகில் உள்ள பசியில் வாடும் சிறு உள்ளங்களுக்கு இன்று ஒருநாள் மட்டுமாவது

முடிந்த வரை உதவி செய்யுங்கள். இன்று ஒருநாள் அவர்கள் முகத்தில் பூக்கும் சந்தோசத்தை பார்போம்.