இந்தியாவில் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட வங்கிகளில் எப் டி கணக்குகளுக்கு மட்டுமல்லாது சேமிப்பு கணக்குகளுக்கும் 7 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. என்ன சேமிப்பு கணக்குகளால் நமக்கு அதிக அளவு வட்டி கொடுக்கக்கூடிய சிறந்த வங்கிகளாக இருக்கக்கூடிய சில வங்கிகளை இந்த தொகுப்பில் காணலாம்.
RBL வங்கி :-
இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 7.5% வட்டி வழங்கப்படுவதோடு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையிலான இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு 7.5% வட்டியும் ஒரு லட்சம் வரையிலான இருப்பு வைத்திருக்கக்கூடிய கணக்குகளுக்கு 3.5 சதவிகிதமும் 5 லட்சம் வரையிலான வாய்ப்புகளுக்கு 4.5% வட்டியும் 5 முதல் 10 லட்சம் வரையிலான இருப்பு வைத்திருக்கக்கூடிய கணக்குகளுக்கு 5.5 சதவிகிதமும் 10 முதல் 25 லட்சம் வரையிலான வைப்பு வைத்திருக்க கூடியவர்களுக்கு 6.5 சதவீத வட்டியையும் இந்த வங்கி வழங்கி வருகிறது.
IDFC FIRST வங்கி :-
இந்த வங்கியில் அதிகபட்ச வட்டியாக 7.25 சதவிகிதம் வழங்கப்படுகிறது. இதற்கான நிபந்தனை குறைந்தபட்ச இருப்புத்தொகை 10 லட்சம் இருக்க வேண்டும் என்பதாகும்.
INDUSINT வங்கி :-
இந்த வங்கியில் 10 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்திருக்கக்கூடிய சேமிப்பு கணக்கு தாரர்களுக்கு 7 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது
YES வங்கி :-
இந்த வங்கியில் தினசரி 10 லட்சத்திற்கு மேல் இருப்புத் தொகையை பராமரிக்கக் கூடியவர்களுக்கு 7% வட்டியானது வழங்கப்பட்டு வருகிறது.
BANDHAN வங்கி :-
எஸ் வங்கியை போலவே பந்தன் வங்கிகளும் தினசரி 10 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
AU வங்கி :-
இந்த வங்கிகளும் 7 சதவீத வட்டி விகிதத்தை பெறுவதற்கு குறைந்தபட்ச இருப்பு தொகையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.