அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில், மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக்கியது குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக எழுதியுள்ளார்.
சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்குவதற்கு காரணம், “மன்மோகன் சிங்கிற்க்கு தேசிய அளவில் அரசியல் பின்புலம் இல்லாத காரணத்தினால், சோனியா காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக்க முடிவெடுத்திருக்கலாம்” என்று ஓபாமா குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதால், ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது என்ற முக்கிய காரணத்திற்காகவும் சோனியா காந்தி இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதால், ராகுலை, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவராக ஆக்குவதற்காக கூட சோனியா காந்தி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று ஒபாமா கூறுகிறார்.
அதேசமயம் ஒபாமா மன்மோகன் சிங்கை புகழ்ந்துள்ளார். எதற்கென்றால், இந்தியாவில் இருக்கின்ற மத அரசியலையும் மீறி, பொருளாதாரத்தை மாற்றி அமைக்கின்ற சிற்பியாக திகழ்ந்ததற்காக ஒபாமா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.