எந்த மாதம் ஐபிஎல் துவங்கும்? – பி.சி.சி.ஐ தகவல்

Photo of author

By Parthipan K

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து இதை பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பி.சி.சி.ஐ கொரோனா கட்டுக்குள் வரும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் துவங்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோஹ்ரி கூறுகையில் “பருவமழைக்குப் பிறகுதான் கிரிக்கெட் நடவடிக்கைகள் தொடங்க முடியும், ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் முற்றிலும் இந்திய அரசாங்கத்தால் வழிநடத்தப் போகிறோம், அரசாங்க வழிகாட்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பின்பற்றுவோம். மழைக்காலத்திற்குப் பிறகுதான் கிரிக்கெட் நடவடிக்கை நடைமுறையில் தொடங்க முடியும்” என தெரிவித்துள்ளார்

இதனால் பருவ மழைக்காலமான ஜூலை – செப்டம்பருக்கு பின் ஐபிஎல் போட்டிகள் துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபரில் டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தை ஐபிஎல் போட்டிகள் நடத்த பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.