லாக்டவுனிலும் அசராத பக்தர்கள் – திருப்பதி கோயிலுக்கு இ-உண்டியல் மூலம் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

0
62

லாக்டவுனிலும் அசராத பக்தர்கள் – திருப்பதி கோயிலுக்கு இ-உண்டியல் மூலம் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், தேவஸ்தான ஊழியர்கள், உறுப்பினர்கள், பாதுகாப்பு படையினர் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் மூலம் தினசரி 10 ஆயிரம், 20 ஆயிரம் என உண்டியல் வசூலாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாளில் 2 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

கோடைக்காலத்தில் தான் திருப்பதியில் கூட்டம் மிக அதிக அளவிலிருக்கும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தங்கள் காணிக்கையை இ-உண்டியல் மூலம் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1.97 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டை விட 18 லட்சம் கூடுதல் பணம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் பெரும் வருமான இழப்பை திருப்பதி தேவஸ்தானம் சந்தித்து வந்தாலும், இதை போன்ற காணிக்கைகள் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

author avatar
Parthipan K