இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இவர் ஓராண்டு காலமாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடாமல் 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பெர்த் மைதானமானது பெரிதும் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கில் விளையாட மாட்டார்கள் என்ற நிலையில் பும்ரா கேப்டனாக இந்திய அணி களமிறங்க உள்ளது.
முகமது ஷமி முழு உடல் தகுதி பெறவில்லை என்று கூறி வந்த நிலையில் அவர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து அவரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கங்குலி தற்போது முகமது ஷமி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். அதனால் முதல் போட்டியில் அவரை விளையாட வைக்க ஆஸ்திரேலியா அனுப்புங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதை பிசிசிஐ கேட்கவில்லை. இந்நிலையில் முகமது ஷமி பெங்கால் அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட வலியுறுத்தியுள்ளது பிசிசிஐ. முதல் போட்டியில் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.