இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி.
இந்நிலையில் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். இதில் அவரிடம் அவருடைய வரிசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் எந்த வரிசையில் களமிறங்க போகிறேன் என்று என்னிடம் கூறி விட்டார்கள் ஆனால் வெளியில் சொல்லக்கூடாது என நிர்வாகம் கூறியுள்ளது. அதனால் நான் அதை சொல்ல முடியாது. இதை கேட்டு செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை நிலவியது.
நான் எந்த வரிசையிலும் விளையாடுவேன். என்னை பொறுத்தவரை நான் இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும் என்பதே எந்த வரிசையில் வேண்டுமானாலும் நான் விளையாட தயார் என்று கூறியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா குறித்த கேள்விக்கு அவர் நாளை உங்களை சந்திப்பார் அவரிடம் உங்கள் கேள்விகளை கேளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை நான் பிங்க் போட்டியில் விளையாடியதில்லை ரெட் பால் க்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. நான் பிங்க் பால் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை அதனால் அதற்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன் என்றும் அவர் கூறினார்.