படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!

0
124

உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள மாதங்கி முத்திரை செய்யப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.முத்திரைகளில் பல வகைகள் இருக்கின்றது.இவை பல நன்மைகளை வழங்கக் கூடியவையாகும்.

மாதங்கி முத்திரையை தினமும் செய்து வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.மூளையின் செயல்பாடு அதிகரிக்க ஞாபகத் திறன் மேம்பட தினமும் இரண்டு நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம்.

மலச்சிக்கல்,பைல்ஸ்,ஆசனவாய் வலி போன்றவற்றை இந்த மாதங்கி முத்திரை சரி செய்யும்.மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் இருக்க தினமும் 20 நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம்.அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முத்திரை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

இந்த முத்திரை செய்வதால் மார்பு,வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.கல்வியில் சிறந்த மாணவராக உருவெடுக்க தினமும் இந்த முத்திரை செய்யலாம்.மாதங்கி முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் பதற்றம் நீங்கும்.இந்த முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் வரை செய்து வந்தால் புத்தி கூர்மை அதிகரிக்கும்.மன அமைதி கிடைக்க தியானம் செய்வது போல் இந்த முத்திரை செய்து வரலாம்.

ஒரு செயலை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் 20 நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்து வாருங்கள்.

மாதங்கி முத்திரை செய்வது எப்படி?

முதலில் முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து கொள்ளவும்.பிறகு இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாக கோர்த்துக் கொள்ளவும்.பிறகு நடு விரல் இரண்டையும் மட்டும் நேராக நீட்டி ஒன்றுடன் ஒன்று தொட்டபடி வைக்க வேண்டும்.இது தான் மாதங்கி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

Previous article2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!
Next articleWHITE HAIR பிரச்சனை? 2 நிமிடத்தில் முடி கருகருன்னு மாற.. ஹோம் மேட் ஹேர் டை போதும்!!