தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

Divya

இந்த காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாக உள்ளது.உணவு பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைத்துக் கொள்ள பிரிட்ஜ் பயன்படுகிறது.இருப்பினும் உணவு வைத்து பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

நாம் பிரிட்ஜில் சேமிக்கும் ஒவ்வொரு உணவிற்கும் கால வரைமுறை இருக்கிறது.காய்கறிகளை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.பழங்களை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி,மீன் போன்றவற்றை ப்ரீசரில் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட உணவுகளை அதிகபட்சம் 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.குழம்பு,சட்னி,சாதம் போன்ற உணவுகளை அதிகபட்சம் 2 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.வெட்டி வைக்கப்பட்ட காய்கறிகளை 2 நாட்கள் காரை வைத்து பயன்படுத்தலாம்.அரிசி மாவு,சப்பாத்தி மாவு போன்றவற்றை இரண்டு நாட்கள் வரை வைக்கலாம்.

நறுக்கிய பழங்களில் தர்பூசணியை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.நறுக்கிய எலுமிச்சம் பழத்தை 8 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.இஞ்சி பூண்டு விழுதை ஒரு வாரம் வைத்து பயன்படுத்தலாம்.

தேங்காய் பாலை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.அதேபோல் வெள்ளை சாதத்தை ஒரு நாள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது.உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.அழுகிய பழங்கள்,காய்கறிகள் இருந்தால் தூக்கி ஏறிய வேண்டும்.

தக்காளி பழத்தை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.முட்டைகோஸ்,காளான் போன்ற பொருட்களை மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.