பச்சை பட்டாணி சாப்பிடும் முன் கட்டாயம் இதனை கவனியுங்கள்.. பெரும் ஆபத்து!!

Photo of author

By Divya

பச்சை பட்டாணி சாப்பிடும் முன் கட்டாயம் இதனை கவனியுங்கள்.. பெரும் ஆபத்து!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருள் பச்சை பட்டாணி.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.கண்ணை பறிக்கும் பச்சை நிறத்தில் உருளை வடிவத்தில் இருக்கும் பச்சை பட்டாணி சுவையான உணவுப் பொருளாகும்.

பட்டாணியில் குருமா,பட்டாணி சுண்டல்,பிரிஞ்சி சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.குளிர்கால பயிரான பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது.

பட்டாணி,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடிய பொருள்.நீரிழிவு நோயாளிகள் பட்டாணியை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.நார்ச்சத்து நிறைந்த பட்டாணி செரிமான பிரச்சனை,மலச்சிக்கல்,வாயுத் தொல்லையை போக உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.ஆனால் அளவிற்கு மீறி பச்சை பட்டாணி சாப்பிட்டால் உடலுக்கு தீங்காக மாறிவிடும்.

பச்சை பட்டாணியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு வீக்கம் ஏற்படும்.அதிக பட்டாணி சாப்பிடுவதால் வாயுத் தொல்லை உண்டாகும்.அதிகமாக பட்டாணி சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.பட்டாணி உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கச் செய்து விடும்.

பட்டாணியை பச்சை பசேல் என்று காட்ட மாலாசைட் கிரீன் என்ற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.இது தடை செய்யப்பட்ட ஒரு ரசாயனம் ஆகும்.ஆனால் நமது இந்திய மார்க்கெட்டில் லாப நோக்கத்திற்காக பச்சை பட்டாணி,கோவைக்காய் உள்ளிட்ட பொருட்களில் இந்த இரசாயனம் கலக்கப்படுகிறது.

இதனால் மரபணு மாற்றம்,புற்றுநோய்,மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.அதிக இரசாயனம் கலக்கப்பட்ட பட்டாணியை பார்த்தவுடன் கண்டறிந்துவிட முடியும்.பட்டாணி அடைத்து வைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் பச்சை நிற சாயம் இருந்தால் அது இரசாயனம் கலக்கப்பட்டவை என்று அர்த்தம்.